பள்ளிச் சேர்க்கை
பள்ளிச் சேர்க்கை
எங்களை சந்திக்க
உங்கள் குழந்தைகள் கல்வித் தகுதியில் எந்த நிலையில் இருந்தாலும், சிறந்த பள்ளியை தீர்மானிப்பதில் எங்கள் பள்ளியை அணுகுங்கள். உங்கள் குழந்தையை சிறந்தமுறையில் உருவாக்க எங்கள் வளாகத்திற்குள் நுழையுங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது.
விண்ணப்பத்தை பெற எங்கள் பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். ஆண்டு முழுவதும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது
மழலையர் சேர்க்கை, தொடர்புக்கு திருமதி. ரேகா நியாஸ்.
9489980939
தொடக்கப்பள்ளி சேர்க்கை தொடர்புக்கு - திருமதி. பிரியா சுதாகர்.
9489980939
இடைநிலை, மேல்நிலைப்பள்ளிசேர்க்கை தொடர்புக்கு - திருமதி. ரெஹனா பாத்திமா.
9489980939
சேர்க்கைக்கான கொள்கை
பள்ளி மாணவ சேர்க்கை என்பது முந்தைய சாதனை அடிப்படையில் மட்டுமல்லாமல் நல்ல நடத்தை, கடின உழைப்பு மற்றும் அவர்களின் உற்சாகப் பங்கேற்பு, சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பு சார்ந்தும் வழங்கப்படுகிறது.
ஒரு வகுப்பில் இடத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு முன் மாணவர்களின் திறனுக்கு ஏற்பவும், அந்த வகுப்பால் அடையக்கூடிய தர நிலைகளுக்கு ஏற்ப எங்கள் கல்வியை வழங்க முடியும் என்பதை உணர்ந்து உள்ளோம். இங்கு அனுமதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி வாழ்வின் முன்னேற்றம் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர விண்ணப்பம் செய்தவரின் வயது மற்றும் கூடுதல் தகவல்களை கருத்தில் கொண்டும் தேர்வு செய்வோம். கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கும் நிபுணர்களை கொண்டு ஆலோசித்த பிறகு பயிற்சிக்கான கட்டணம் பெற்றோர்களிடம் வசூலிக்கப்படும்.
இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இவ்வாறு நடத்துவதன் நோக்கம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதே.
சேர்க்கைக்கு வரும் மாணவரின் முந்தைய பள்ளியை தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ,
- பரிந்துரையின் அடிப்படையிலும்
- கட்டணம் முறையாக செலுத்துவதை
உறுதி செய்து கொள்ளவும் எங்களுக்கு முழு பொறுப்பு உண்டு.
அனைத்து விண்ணப்பதாரர்களும் சாதி அடிப்படையில் இல்லாமல், குறைபாடுகளை பொருட்படுத்தாமல் நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுவார்கள் என்பதை உறுதி செய்கிறோம்.
Covid னால் ஏற்பட்ட தடைகள்
பள்ளிக் குழந்தைகள் கோவிட் 19 இன் நேரடி மற்றும் மறைமுக தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய 2 வருட கல்வியை இழந்துள்ளனர். கடந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தையின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் வயதிற்கு ஏற்ற தர நிலைகளில் இல்லாமலும், அவர்களின் இலக்கை அடையாமலும் அவர்களது கற்றல் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் அவர்களது சமூக வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021 கல்வி ஆண்டில் எங்கள் பள்ளியில் இடம் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் பள்ளியில் சேர்க்கை வழங்க முடியாத நிலை ஏற்பட்ட. 2023 ஆம் கல்வி ஆண்டில் இந்த இடைவெளிகளை போக்க பள்ளி கடினமாக உழைத்து வருகிறது.
பள்ளி கட்டணம்
பண மதிப்பு ஏற்ற இறக்கத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் மாறுதல்கள் அடையும்.
கடின உழைப்பு
“வெற்றி பெற வியர்வைசிந்தி உழைக்க வேண்டும்” என்பார்கள் கடின உழைப்பே வெற்றிக்கு அடிப்படை. நாங்கள் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் இதையே எதிர் பார்க்கின்றோம். லட்சியமும் அதனை அடையும் உன்னத வேட்கையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் ஊக்குவிக்கப்பட வேண்டியவை…
பங்கேற்றல்
மகிழ்ச்சியான குழந்தை மற்ற குழந்தைகளை விட எளிதில் கற்றுக் கொள்கிறது என்பதை அறிவோம். இதனை அனைவரும் அறிந்து குழந்தைகளோடு இணக்கமாக பணியாற்ற வேண்டுகின்றோம். இங்கே பாடங்களும் பாடத்திட்டங்களும் நிறைவாய் உள்ளது ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சுவாரசியமாக பாடங்களை நடத்த பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.
இரக்கத்துடன் இருங்கள்
ஒத்துழைப்பில் நேர்மறையான மற்றும் தாராளமான அணுகுமுறையை நாங்கள் நம்புகிறோம், மேலும் தலைமைப் பண்பு என்பது இரக்கம் மற்றும் சேவையை உள்ளடக்கியது