கிளாஸ்புரூக் கல்விசார்
கிளாஸ்புரூக் கல்விசார்
மழலையர் - முதல் நிலை
எங்கள் பள்ளியின் மழலையர் குழந்தைகளுக்கான வகுப்பறைகள் பள்ளி வளாகத்தில் தனித்துவமாக அழகிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒளியை வரவேற்க ஏராளமான ஜன்னல்களைக் கொண்ட ஆறு பெரிய வகுப்பறைகள் எங்கள் மழலையர்க்கு இனிய இல்லமாக திகழ்ந்து வருகிறது. பரந்து விரிந்துள்ள பாதுகாப்பான விளையாட்டுப் பகுதி மற்றும் செயல்பாட்டுப் பகுதிகள் கட்டிடத்தை சுற்றி சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. வேலியிடப்பட்ட பூந்தோட்டமும், விளையாட்டு மைதானமும் நேரடி பாதையால் வகுப்பறைக்கு அருகிலேயே உள்ளன. இது எங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான உள்ளது. ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளிக்கு செல்வதானால் மூன்று வயதிலிருந்து மழலையர் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
தொடக்கப்பள்ளியில் ஐந்து முதல் பத்து வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான கல்வி வழங்கப்படுகிறது. தொடக்கப்பள்ளி கட்டிடம் மழலையர் கட்டிடதிற்கும் அருகாமையில் அழகுற அமைந்துள்ளது. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக்கொள்ளும் அனுமதி வழங்கப்படுகிறது.
இடைநிலை- மேல்நிலை
11 வயது வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் இடைநிலைப் பள்ளியிலும் 16 முதல் 17 வயது உடையவர்கள் மேல்நிலைப் பள்ளியிலும் உள்ளனர். இடைநிலை, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்று தளங்களில் உள்ள பெரிய கட்டிடத்தை பகிர்ந்துக் கொள்கின்றனர். இங்குள்ள வகுப்பறைகள் நல்ல காற்றோட்டமாகவும் ,அளவில் பெரியதாகவும் வானம் பார்க்கும் முற்றத்துடன் அமைந்துள்ளது.
கலைத்திட்டம்
மழலையர் – முதல் நிலை
தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்ப புதிய வடிவில் மழலையருக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம்.
மேலும்,
குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஈடுபாட்டுடன் கூடிய வளர்ப்பு சூழலை வழங்குதல்
குழந்தைகளுக்கான தன்னம்பிக்கையும், உலகத்தின் மீதான நம்பிக்கையும் வளர்க்க உதவுதல்
அவர்களின் தனித்திறமைகளின் மீது நம்பிக்கை வளர்க்கவும்
எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இயக்கச் செயல்பாடுகளையும், சிறந்த இயக்கத் திறன்களையும், மொழித்திறன்களையும் மேம்படுத்துதல்.
தினசரி பணிகளில் தன்னிச்சையாக ஈடுபடும் வாய்ப்புகளை வழங்குதல்,
பாரம்பரிய முறையில் கற்பித்தல் மற்றும் விளையாட்டின் அடிப்படையில் கற்பித்தல் போன்றவற்றால் எங்களின் இலக்கை அடைவோம்.
தொடக்கப்பள்ளி
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியின் அடிப்படை பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகிறது. அங்கு பாடநூல் அறிவு நடைமுறை பணிகளோடு சேர்த்து வழங்கப்படுகிறது. இலக்கியம் ,எண்ணியல் மற்றும் தமிழ் மொழி அடிப்படைகளில் குழந்தைகளின் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பாடத்திட்டம் கவனம் செலுத்துகின்றது. இந்த வயதினருக்கான வலுவான அடிப்படையில் கற்பித்தல் நடைபெற்று வருகிறது
இடைநிலை மற்றும் மேல்நிலை
11 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கற்பித்தல் நடைபெறுகிறது. இது ஆசிரியர் தலைமையிலான கற்பித்தல், குழு கற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல்முறை திட்டங்களின் மூலம் கற்றல் என பல செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. எங்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அறிவியல்,வணிகவியல் கணக்குப்பதிவியல், கணினி அறிவியல் போன்ற விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படிக்க வழிவகை செய்கிறோம். விரைவில் மனித நேயம் சார்ந்த பாடங்களை அறிமுகப்படுத்துவதற்கும் முயற்சி செய்து வருகிறோம்.
கூடுதல் உதவி தேவைப்படுவோர்
கடந்த ஆண்டு பள்ளி , கூடுதல் உதவி தேவைக் குழுவை உருவாக்குவதில் முழு தீவிரமாக செயல்பட்டது. கற்றலில் பின் தங்கியுள்ள மாணவரின் கற்றலை மேம்படுத்தி ஊக்குவிப்பது அல்லது கற்றலுக்கு தடையாக உள்ள காரணங்களை அடையாளம் கண்டு சரி செய்வது ஆகியவை இதன் நோக்கமாகும்.
கூடுதல் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிய எங்கள் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கற்றலில் உள்ள சிரமங்களைக் கண்டறிய நாங்கள் சில உத்திகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்தத் துறையில் நிபுணர்களை பணியமர்த்தி கற்றல் சிரமம் உள்ளவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றோம்
கற்றல் ஆசிரியர்களுக்கான எங்கள் ஆதரவு, சக ஊழியர்களுக்கான ஆலோசனைகள், வகுப்பில் தேவைப்படும் ஊக்கம், குழு கற்பித்தல், சிறு குழு பயிற்சி மேலும் தனித்தனியாக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்டு குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தி வருகின்றோம். குழந்தைகள் என்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து பெற்றோர்களுடன் இணைந்து இதன் பணியை சிறப்புடன் செய்து வருகின்றோம். தேவைப்படும் இடங்களில் தேசிய திறந்த நிலைப்பள்ளி பாடத்திட்டத்தை அணுகவும் ஆர்வமாக உள்ளோம்.