நிறுவனர் விருது

இந்த ஆண்டு எங்கள் நிறுவனரின் மறைவு எங்களை மீளாத் துயருக்கு ஆழ்த்தியது. அவரின் நினைவாகவும் மரியாதை செலுத்தும் விதமாகவும் நிறுவனர் பெயரில் விருது வழங்க தீர்மானித்துள்ளோம். 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களின் வெவ்வேறு பிரிவுகளில் தனித்திறமையை ஆராய்ந்து சிறந்தோருக்கு விருது வழங்கப்பட தீர்மானித்துள்ளோம்.

விளையாட்டு

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், இடைவிடாத பங்களிப்பையும், குழு உணர்வையும், அறிவுத்திறனையும் நிரூபிக்கும் மாணவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. மாநில அல்லது தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரையும் அங்கீகரித்து விருது வழங்கப்படும்.

இசை

இசைப் பள்ளியில் தேர்ச்சி பெறுபவர்களையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இசைக்கருவிகள் வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களையும் அங்கீகரித்து விருது வழங்கப்படும்.

நடனம்

பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் செய்யும் அளவிற்கு ஆர்வம் உள்ளவர்களை அங்கீகரித்து விருந்து வழங்கப்படும்.

மேலும் சில செயல்பாடுகள்:

சில ஒழுங்கமைக்கப்பட்ட குழு அல்லது தனிப்பட்ட உடல் சார்ந்த செயல்பாடுகள் தன்னார்வ செயல்பாடுகள் போன்றவற்றை நாங்கள் இணைப்போம்

மலையேற்றப்பயிற்சி:

எங்கள் பள்ளியைச் சுற்றி நான்கு மலைகள் எளிதாய் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் உள்ளது. இந்த வருடம் எங்கள் உடற்கல்வித்துறை இந்த மலைகளை ஆய்வு செய்து கால நிலைகள் அனுமதிக்குமபோது மலையேற்ற பயிற்சி அளிக்க காத்திருக்கிறது. மலை உச்சியை அடைவதற்கு இங்கே பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மலை ஏறுவதில் உள்ள சவால்களைக் கடந்து மலை உச்சியை அடைய வழிவகை செய்கின்றோம். இவையெல்லாம் எங்களின் புதிய முயற்சிகள் ஆகும் இதனை சிறப்புற செயல்படுத்த மாணவர்கள் உற்சாகத்துடன் முன் வரவேண்டும் என்று விரும்புகின்றோம்.