இணை கலைத்திட்டம்

இணை கலைத்திட்டம்

இணை கலைத்திட்டம்

நாங்கள் எப்போதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புகின்றோம். மகிழ்ச்சியான குழந்தை தான் எளிதில் கற்றுக் கொள்கிறது என்பதை அறிவோம். எங்கள் நிறுவனரும் குழந்தைகளை வகுப்பறைகளுக்கு வெளியேயும் திறம்பட கற்றுக்கொள்ள மகிழ்யுடன் அனுமதித்தார். அவரது நோக்கம் நிறைவேற நாங்கள் உழைத்து வருகிறோம் இதற்காக பழைய விளையாட்டுப் போட்டிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.

உடற்கல்வி குழு திறமையானவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் kho-kho மற்றும் handball விளையாட்டுக்கு பயிற்சியளராக திருமதி. செல்வி, கால் பந்து பயிற்சியாளராக எங்கள் முன்னாள் மாணவர் திரு G. முனீஸ் அவர்களையும் நியமித்துளோம். இவர் தனியார் கால்பந்து பயிற்சி நிலையத்தை பள்ளிக்கு அருகில் அமைத்து சேவை மனப்பான்மையோடு பயிற்சி அளித்து வருகிறார். கூடைப் பந்தாட்டத்திற்கு பயிற்சியாளராக திரு ராபின் உள்ளார். இவர் பல குழந்தைகளுக்கு மாநிலம் மற்றும் தேசிய அளவில் விளையாட பயிற்சி அளித்து வருகிறார்.

தற்போது எங்கள் மாணவர்களை விளையாட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக ஈடுபடுத்தி வருகிறோம். இந்த ஆண்டு நடனம், இசைக்கலை மற்றும் நாடகம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கெடுக்க வழிவகை செய்துள்ளோம். அதற்காக புதியதாக புதுப்பிக்கப்பட்ட நடன அறைகளும், பல இசைக்கருவிகளும் நிறைவாய்  கற்க வழிவகைச்  செய்துள்ளோம்.