எங்களைப் பற்றி
எங்களைப் பற்றி
தடம் பதித்த வரலாறு
மறைந்த எங்கள் அன்பிற்கினிய நிறுவனர் திரு. துவாரகநாதன் வீரய்யாப்பிள்ளை அவர்கள் 1992 இல் பள்ளிக்கு அடித்தளமிட்டார். உயர்கல்வியை குறைந்த கட்டணத்தில் வழங்குவதே இப்பள்ளியின் நோக்கமாகும். நிறுவனர் தனது தந்தை திரு. எம். கே. வீரய்யாப்பிள்ளையின் நினைவாக பெருநிதியை முதலீடாக செலுத்தி லாப நோக்கற்ற எம்.கே.வீ என்ற அறக்கட்டளையை நிறுவி பள்ளியை படிப்படியாக உயர்த்தினார்.
எங்கள் பள்ளி முதலில் பாலர் மற்றும் மழலையர் பள்ளியாக ஃபேர்லேண்ட்ஸ் இல் தொடங்கப்பட்டது. பின்னர் 1994 இல் தற்போதைய வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அன்று மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை 87 மாணவர்களைக் கொண்டு செயல்பட்டது. அன்று அத்தளத்தில் இருந்த கோழிப்பண்ணை கொட்டகைகள் தற்காலிக வகுப்பறைகளாக அனைத்து வசதிகளுடன் நிறுவப்பட்டது.
முதலில் மழலையர் பிரிவிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன பின்னர், தொடக்கப் பள்ளி, 10ஆம் வகுப்பு மற்றும் உயர் நிலைப்பள்ளி வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததன் காரணமாக மேலும் ஒரு தொகுதி 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இன்று பள்ளி முழுமையான வசதிகளுடன் கே ஜி, தொடக்கப்பள்ளி, இடைநிலை, மேல்நிலை என்று தனித்தனியாக இயங்கி வருகிறது.
முதலில் மழலையர் பிரிவிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு வரை உள்ள மானவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததன் காரணமாக மேலும் ஒரு தொகுதி 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இன்று பள்ளி முழுமையான வசதிகளுடன் கே ஜி, தொடக்கப்பள்ளி, இடைநிலை,மேல்நிலை என்று தனித்தனியாக இயங்கி வருகிறது.
தலைமையாசிரியரின் அறிக்கை
அன்பார்ந்த கிளேஸ்புரூக் மெட்ரிகுலேஷன் குடும்பதிற்கு,
கிளேஸ்புரூக் மெட்ரிகுலேஷன் பள்ளியை முதல்வராக வழிநடத்துவது எனக்கு கிடைத்த பெருமையும் பாக்கியமுமாக நினைக்கிறேன். ஒரு கல்வியாளராக எனது இருபது வருட பயணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து, மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பல்வேறு வகுப்புகளுக்கு பாடம் கற்பித்துள்ளேன். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தியே அமையும். திறமை கொண்ட எங்கள் குழுவை முழு அர்ப்பணிப்புடன் வழிநடத்துவேன் என்று உறுதியளிக்கின்றேன்
நாங்கள் எங்கள் மாணவர்கள் அனைவரையும் ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான வாழ்க்கை திறன்களை கற்பிப்போம். மேலும் அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து தன்னம்பிக்கையுடன் தீர்வு காண கற்றுக்கொடுப்போம். ஒவ்வொரு குழந்தையையும் மதிப்புடன் வழிநடத்துவதே எங்கள் முதல் கடமையாக இருக்கும்
இப்படிக்கு
முதல்வர்
கோமதி ராணி
எங்கள் வளாகம்
நான்கு சிகரங்களின் மத்தியில் உள்ள நகர மலை அடிவாரத்தில் அழகிய இயற்கை சூழ்ந்த எழில்வாய்ந்த இடந்தில் எங்கள் பள்ளி அமைந்துள்ளது. ஒரு காலத்தில் விவசாய நிலமாகவும், கோழிப்பண்ணையாகவும் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. இன்று மரங்கள் சூழ்ந்த பெரிய மைதானத்துடன் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களுக்கு பின்னால் உள்ள ஏராளமான நாட்டு மரங்களில் எங்களின் இயற்கையின் மீதான அன்பை நீங்கள் காணலாம். பரந்து விரிந்த வளாகம் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்.
மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நகர இரைச்சல்களின் சலசலப்பில் இருந்து சற்று ஓய்வு வழங்கும் இடமாகத் திகழ்ந்து வருகிறது. எங்களிடம் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து மற்றும் வலைப்பந்து உள்ளிட்ட பல்வேறு பெரிய மைதானங்கள் மாணவர்களின் உடல் நலத்தை வழங்க கம்பீரமாக காட்சியளித்து நிற்கிறது. எங்களின் அனைத்து வசதிகளும் எளிதில் அடையும் தூரத்தில் இருப்பதால் அனைவரும் நன்முறையில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எங்கள் உறுப்பினர்கள்
எங்கள் பள்ளி தற்போழுது, ஏறத்தாழ 1000 மாணவர்களையும் 50 ஆசிரியர்களையும் 20 பணியாளர்களையும் கொண்டுள்ளது.
எங்கள் செயலாளரும் தலைமை நிதி அதிகாரியுமான திரு. பாலசுப்பிரமணியம் ஒரு சிறு குழுவுடன் நிதி அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு குழந்தைகளும் தங்களின் சிறந்த தனித்துவமான திறன்களில் வெற்றி பெற பாதுகாப்பான சூழலும், அவர்கள் மேல் நாம் காட்டும் அக்கறையுமே காரணம் என்பதை வழியுறுத்தி வருகிறோம்.
பள்ளியின் மேற்பார்வையாளரான திரு. ராஜு எங்கள் பள்ளி மைதானத்தை பராமரித்து எங்கள் நிறுவனரின் நோக்கமான பசுமை நிறைந்த வளாகத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
“அன்பாக இருத்தல், கடினமாக உழைத்தல், ஈடுபாடோடு பங்கேர்த்தல் … மனதார உழைத்திடுங்கள்… முழுமையான ஈடுபாடு செலுத்துங்கள்.” என்ற நெறிமுறைகள் நிறுவனரின் நோக்கமாக இருந்தன.
இன்றும் இந்த நெறிமுறைகளையே எங்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சக ஊழியர்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் பின்பற்றும்படி அறிவுரை செய்கிறோம்..
ஒவ்வொரு குழந்தைகளும் தங்களின் சிறந்த தனித்துவமான திறன்களில் வெற்றி பெற பாதுகாப்பான சூழலும், அவர்கள் மேல் நாம் காட்டும் அக்கறையுமே காரணம் என்பதை வழியுறுத்தி வருகிறோம்.
தன்னம்பிக்கை மற்றும் சமூகத் திறன்களை வளர்க்க அவர்களை ஊக்கப்படுத்தி சமூகத்தில் நட்புறவுடன் நம்பிக்கை கொள்ளவும் சக மனிதர்கள் மீதான அக்கரையை அதிகப்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறோம்.
தொடர்புக்கு
தலைமையாசிரியர் அலுவலகம் – 0427-2529230
தலைமையாசிரியரின் உதவியாளர் – 9489980903
திருமதி ரெஹனா பாத்திமா (பள்ளிச் சேர்க்கைக்கு)- 9489980939
மாணவர்களின் தாமதத்திற்கான காரணத்தை பதிவிட – 9489980903